அனைத்து ரயில்களும் வழக்கம்போல் ஓடும்

Webdunia

ஞாயிறு, 30 செப்டம்பர் 2007 (12:48 IST)
தமிழகத்தில் திங்கட்கிழமை நடக்கும் முழு அடைப்பின்போது அனைத்து ரயில்களும் வழக்கம் போஓடும் என்று தென்னக ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கூறினார்.

சேது சமுத்திர திட்டத்தை விரைவாக நிறைவேற்றக்கோரி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழ்நாட்டில் திங்கட்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இருந்தாலும் பேருந்து, ரயில், விமான போக்குவரத்திற்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் அனைத்து ரயில்களும் நாளை வழக்கம் போல ஓடும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் மிஸ்ரா நேற்று கூறுகையில், "தமிழ்நாட்டில் அனைத்து ரெயில்களும் திங்கட்கிழமை வழக்கம் போல ஓடும். அதற்கு உரிய பாதுகாப்பு அளிக்கும்படி தமிழக அரசை கேட்டு இருக்கிறோம்'' என்று தெரிவித்தார்.

ரெயில்கள் இயக்கம் தொடர்பாக மற்றொரு அதிகாரி பேசுகையில், முழு அடைப்பு காரணமாக ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ரயில் நிலையங்களிலும், தண்டவாளங்களிலும் ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. ரயில் போக்குவரத்தை தடுப்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளோம். எனவே, பயணிகள் அச்சமின்றி ரயிலில் பயணம் செய்யலாம் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்