மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு!

Webdunia

சனி, 29 செப்டம்பர் 2007 (17:45 IST)
மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகபட்ச அளவான 120 அடியைத் தாண்டியது.

இந்த வருடம் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடியை 6 வது முறையாக தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று காலையில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120.30 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 38,217 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 23,623 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.

காவேரியின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து இருப்பதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த வாரம் முழுவதும் விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது. தற்போது நீர் வரத்து அதிகளவு இருப்பதால், திறந்து விடும் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்