பார்வையற்ற மாணவர்களின் கோரிக்கை ப‌‌‌ரி‌சீலனை: அரசு அ‌றி‌வி‌ப்பு!

Webdunia

சனி, 29 செப்டம்பர் 2007 (14:54 IST)
பார்வையற்ற மாணவர்களின் கோரிக்கைகளை அரசு கனிவுடன் பரிசீலிக்கும் என்றும், முதலமைச்சர் நாளை சங்க பிரதிநிதிகளை சந்திக்க இருப்பதாகவும், எனவே போராட்டத்தை உடனே கைவிடுமாறும் சங்க பிரதிநிதிகளைக் அமைச்சர் கேட்டு கொண்டார் என த‌மிழக அரசு செ‌ய்‌தி கு‌றி‌ப்‌பி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர், தங்களது 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 26ஆ‌ம் தேதி முதல் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சர் கருணாநிதி அறிவுரைப்படி, அமைச்சர் பூங்கோதை 26ஆ‌ம் தேதி மாலை, சங்கத்தின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனை நடத்தினா‌‌ர் எ‌ன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

சங்கத்தினர் அளித்துள்ள நியாயமான மற்றும் நடைமுறைப்படுத்தத் தக்க கோரிக்கைகளின் மீது சம்பந்தப்பட்ட துறைகளுடன் கலந்து ஆலோசித்து ஒரு மாத காலத்திற்குள் உரிய ஆணைகள் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே போராட்டத்தை உடனே கைவிட வேண்டும் என்று சங்க பிரதிநிதிகளை அமைச்சர் பூங்கோதை கேட்டுக் கொண்டார் எ‌ன்று‌ம் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதால், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பார்வையற்றவர்களை, முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் அமைச்சர் பூங்கோதை நேரில் சந்தித்து, அவர்களுடைய உடல்நலம் குறித்து விசாரித்தார் எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

அவர்களுடைய கோரிக்கைகளை அரசு கனிவுடன் பரிசீலிக்கும் என்றும், முதலமைச்சர் நாளை சங்க பிரதிநிதிகளை சந்திக்க இருப்பதாகவும், எனவே போராட்டத்தை உடனே கைவிடுமாறும் அமைச்சர் சங்க பிரதிநிதிகளைக் கேட்டு கொண்டார் என அரசு செ‌ய்‌தி கு‌றி‌ப்‌பி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்