தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அறிவிப்பின்படி, தேவையற்ற தொலைபேசி அழைப்பைத் தவிர்க்க பி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த வசதியை விரும்பும் செல்போன் வாடிக்கையாளர்கள் ‘ஈசஇ அஇப’என டைப் செய்து 53733 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
பி.எஸ்.என்.எல். சாதாரண தொலைபேசி வாடிக்கையாளர்கள் இந்த வசதியைப் பெற 1500 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு பதிவு செய்யவேண்டும்.