வி.ஏ.ஓ. தேர்‌வி‌ல் வெற்றி : 22‌ல் சான்றிதழ் சரிபார்ப்பு!

Webdunia

சனி, 29 செப்டம்பர் 2007 (11:32 IST)
கிராம ‌நி‌ர்வாக அ‌‌‌‌திகா‌ரி தே‌ர்‌வி‌ல் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு ப‌ணி அக்டோபர் 22ஆ‌ம் தேதி தொடங்குகிறது எ‌‌ன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) செ‌ய்‌தி வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளது.

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவு அண்மையில் வெளியிடப்பட்டது. தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் மூலச்சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி சென்னை அ‌ண்ணாசாலை அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் அக்டோபர் மாதம் 22‌ம் தேதி முதல் நவம்பர் 2ஆ‌ம் தேதி வரை நடைபெற உள்ளது எ‌ன அரசு ப‌ணியாள‌‌ர் தே‌ர்வாணைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தங்கள் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பிய சான்றிதழ் நகல்களின் அசல் சான்றிதழ்கள் மற்றும் கேட்கப்பட்டுள்ள விவரங்களுடன் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் நேரில் ஆஜராகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சான்றிதழ் சரிபார்ப்பு பற்றிய நாள் மற்றும் நேரத்தை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். சான்றிதழ் சரிபார்ப்பு பற்றிய தகவல் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியே தகவல் அனுப்பப்படும் எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்