புக‌ழ் கூடாது எ‌‌ன்பத‌ற்காக சேது ‌தி‌ட்ட‌த்தை எ‌தி‌ர்‌க்‌கிறா‌ர்க‌ள்: கருணா‌நி‌தி கு‌ற்ற‌‌‌‌ம்சா‌‌ற்று!

Webdunia

சனி, 29 செப்டம்பர் 2007 (10:06 IST)
நமக்கு பேரும் புகழும் வந்துவிடக் கூடாது என்பதற்காக சேது சமு‌த்‌திர திட்டத்தை உருக்குலைக்க எண்ணுகின்றார்கள் எ‌ன்று முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிலமற்ற ஏழை விவசாயிகள்-விவசாய தொழிலாளர்களுக்கு 5-வது கட்டமாக இலவச நிலம் மற்றும் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கும் விழா நேற்று நடந்தது. இ‌ந்த ‌விழா‌வி‌ல் முதலமைச்சர் கருணாநிதி 1163 பேருக்கு 2 ஏக்கர் இலவச நிலம், 2321 பேருக்கு வீட்டுமனை பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 404 பேருக்கு உதவிகள் வழங்கினார். ம‌ற்று‌ம் ப‌‌ல்வேறு நல‌த்‌தி‌ட்ட‌ங்களை தொட‌ங்‌கி வை‌த்து‌ முத‌ல்வ‌ர் கருணாநிதி பேசுகை‌யி‌‌ல், சேது சமுத்திரத் திட்டத்திற்கான அனுமதியை முதலில் அளித்ததே வாஜ்பாய் தான். அனுமதியை அளித்து இந்த வழியாகத்தான் இந்த திட்டத்தை நிறைவேற்றப்பட வேண்டும், இந்த முறையிலே தான் நிறைவேற்றப்பட வேண்டும் என்று திட்டம் வகுத்துக் கொடுத்ததும் வாஜ்பாய்தான் எ‌ன்றா‌ர்.

உலகத் தொடர்புக்கு வழிவகுக்கக்கூடிய வாணிப வியாபாரத்திலே முன்னேற்றம், பொருளாதாரத்திலே வலிவு இவ்வளவும் உண்டாக்கக்கூடிய ஒரு திட்டம்தான் சேது சமுத்திரத் திட்டம். தமிழன் என்றைக்கும் தலைதாழாமல் பிறரை எதிர்பார்க்காமல் வாழ வைக்கின்ற திட்டம் எ‌ன்று முத‌ல்வ‌ர் கூ‌றினா‌ர்.

சேது சமுத்திரத் திட்டத்தை அறிஞர் அண்ணா தொடங்கினார். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற குரலை முதலில் தொடங்கியவர் அறிஞர் அண்ணா. அந்தத் திட்டம் நிறைவேறுகின்ற தருவாயில் அப்பொழுது யார் யார் நம்முடைய அண்ணாவோடு சேர்ந்து இந்தத் திட்டம் தேவைதான் என்று சொன்னார்களோ, அவர்களெல்லாம் இந்தத் திட்டத்திற்கு எதிராக இன்றைக்கு அறிக்கை விட்டுக்கொண்டிருப்பதை நீங்கள் காண்கின்றீர்கள் என கருணா‌நி‌தி ‌நினைவு படு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

கடந்த தேர்தல், அதற்கு முந்தைய தேர்தல் இந்த இரண்டு தேர்தலிலும் வெளியிடப்பட்ட கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை வாங்கிப் படித்துப் பாருங்கள். அ.தி.மு.க-அந்தக் கட்சியினுடைய தலைமையும் வெளியிட்டிருக்கின்ற தேர்தல் அறிக்கையில் "ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையிலே உள்ள "ஆடம்ஸ் பிரிட்ஜ்'' பகுதியில் கப்பல் போக்குவரத்துக்கு தடையாக உள்ள மணல் மேடுகள், பாறைகள் இவற்றையெல்லாம் அகற்றி, ஆழப்படுத்திவிட்டு கால்வாய் அமைப்பதுதான் சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம்.'' எ‌ன்று ஜெயல‌லிதா தயா‌ரி‌த்த தே‌‌ர்தல‌் அ‌றி‌க்கையை முத‌ல்வ‌ர் கருணாந‌ி‌தி சு‌ட்டி‌க் கா‌‌ட்டியு‌ள்ளா‌ர்.

சேது சமு‌த்‌திர ‌தி‌ட்ட‌த்தை ‌நிறைவே‌ற்‌றினா‌ல் அந்தப் பெயரும் புகழும் எங்கே கருணாநிதிக்கு வந்துவிடுமோ, சோனியாகாந்திக்கு வந்துவிடுமோ, மன்மோகன் சிங்கிற்கு வந்துவிடுமோ, இந்த தோழமைக் கட்சிகளுக்கெல்லாம் வந்துவிடுமோ என்கின்ற அச்சத்திலேதான் திட்டமே வேண்டாம் என்கின்றார்கள் என கருணா‌நி‌தி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது ராமர் கட்டிய பாலம், அதனால் இடிக்கக்கூடாது என்கிறார்கள்-யார் சொன்னது ராமர் கட்டிய பாலம் என்று. நீங்கள் தேர்தல் அறிக்கையிலே போன தேர்தலிலும், அதற்கு முந்தைய தேர்தலிலும்-அந்தத் தேர்தல் அறிக்கைகளிலே ராமர் பாலம் பகுதியில் சேது சமுத்திர திட்டம் வேண்டாம் என்று குறிப்பிட்டிருக்கிறீர்களா? அப்படி குறிப்பிட்டிருந்தால் நாளைக்கே கொண்டு வந்து காட்டுங்கள். நான் அரசியலை விட்டு விலக தயாராக இருக்கிறேன் எ‌ன்று முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி சவா‌‌ல் ‌விடு‌த்தா‌ர்.

நமக்கு பேரும் புகழும் வந்துவிடக் கூடாது என்பதற்காக இந்தத் திட்டத்தை உருக்குலைக்க எண்ணுகின்றார்கள். நான் அவர்களுக்குச் சொல்லுகின்றேன். தமிழ்நாட்டு மக்கள் ஏமாளிகளல்ல. அவர்கள் இவர்களுடைய பேச்சைக் கேட்டு இந்தத் திட்டத்தை எதிர்க்கக்கூடியவர்கள் அல்ல என கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்