க‌ட்‌சி அலுவலக‌ம் ‌‌மீது தா‌க்குத‌ல்: பா.ஜ. ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்!

Webdunia

வெள்ளி, 28 செப்டம்பர் 2007 (15:23 IST)
பார‌‌திய ஜனதா, இந்து முன்னணி கட்சி அலுவலகங்கள் தி.மு.க.வினரால் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அ‌ந்க‌ட்‌சி‌ நிர்வாகிகள் சென்னை ஆ‌ட்‌சி‌த் தலைவ‌ர் அலுவலக‌ம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்‌‌ப்பாட்டத்திற்கு பா.ஜனதா மாநில தலைவர் இல.கணேசன், தலைமை தாங்கினார். தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் எம்.பி., பொது செயலாளர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் உள்பட பலர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் சேது சமுத்திர திட்டம் வேண்டும், ராமர் பாலம் காத்திட வேண்டும் வரலாற்று சின்னமான ராமர் பாலத்தை பாதுகாக்க வழிதடத்தை மாற்று உள்பட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

வெப்துனியாவைப் படிக்கவும்