சேது சமுத்திரத் திட்டத்தை விரைவாக முடிக்கக்கோரி தி.மு.க. கூட்டணி சார்பில் வருகிற 1ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள முழு அடைப்பிற்குத் தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!
அன்று வன்முறைகள் நடக்காமல் தடுக்கவும், போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாமலும் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக அரசை நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ஆளுங்கட்சியே முழு அடைப்பு நடத்துவது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளதன் மூலம் நீதிமன்றத்துக்கு எதிராக தி.மு.க. கூட்டணி கட்சிகள் செயல்படுகின்றன” என்று கூறியிருந்தார்.