சென்னையில் ஆலங்கட்டி மழை!

Webdunia

வியாழன், 27 செப்டம்பர் 2007 (20:51 IST)
இன்று காலை முதலே வெயில் தகித்த நிலையில், மதியம் 2 மணி அளவில் வானத்தில் மேகமூட்டம் ஏற்பட்டது. 3 மணியளவில் சற்றும் எதிர்பாராத வகையில் பனிக்கட்டிகளாக படபடவென்று பொழிந்தது.

ஆலங்கட்டி மழையைக் கேள்விப்பட்டிருந்த சென்னை வாசிகளுக்கு புது அனுபவமாக இருந்தது. சிறு சிறு பனிக்கட்டிகளாக படபடவென்று விழுந்து தரையில் பட்டுத் தெறித்து உருண்டு சென்று கரைந்ததை எல்லோரும் ஆச்சரியத்துடன் கண்டனர்.

சிறிது நேரத்திற்குப் பின் எப்பொழுதும் போல் மழை பெய்தது. அதே நேரத்தில் இடி மின்னலும் இருந்தது.

ரயில் சேவை பாதிப்பு!

இன்று பிற்பகல் மழை பெய்தபோது மின்னல் தாக்கியதால் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்த கட்டுப்பாட்டு அறை செயலிழந்தது. இதனால் ரயில் போக்குவரத்தை முறைப்படுத்தும் சமிக்ஞைகள் இயங்கவில்லை. சமிக்ஞைகள் இயங்காததால் ஒரு மணி நேரத்திற்கு தாம்பரம் - செங்கற்பட்டு இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் சென்ற ரயில்கள் தாம்பரத்தில் நிறுத்தப்பட்டன.

வெப்துனியாவைப் படிக்கவும்