கொலை மிரட்டல் : வேதா‌‌‌ந்‌தி‌‌க்கு எ‌திராக வழ‌க்கு!

Webdunia

வியாழன், 27 செப்டம்பர் 2007 (16:23 IST)
த‌மிழக முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி இராமரை‌ப் ப‌ற்‌‌றி‌‌க் கூ‌றிய கரு‌த்துகளு‌க்காக அவரு‌க்கு‌க் கொலை‌ மிர‌ட்ட‌ல் ‌விடு‌த்தா‌ர் எ‌ன்று பாஜக மு‌ன்னா‌ள் எ‌ம்‌பி வேதா‌ந்‌தி‌க்கு எ‌திராக கோவை‌‌யி‌ல் வழ‌க்கு‌ப‌திவு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

கோவை மாவ‌ட்ட கலைஞ‌ர் த‌மி‌ழ்‌ப் பேரவை‌த் தலைவ‌ர் எ‌ஸ்.ஜெய‌க்குமா‌ர் நே‌ற்‌றிரவு கொடு‌த்த புகா‌ரி‌‌ன் பே‌ரி‌ல் கு‌ற்ற‌ப்‌ பி‌ரிவு‌க் காவ‌லதுறை‌யின‌ர் வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்து‌ள்ளன‌‌ர்.

இர‌ண்டு மத‌ங்களு‌க்கு இடை‌யி‌ல் மோதலை உருவா‌க்குத‌ல், வத‌ந்‌திகளை‌ப் பர‌ப்புத‌ல், கொலை‌மிர‌ட்ட‌ல் ‌விடு‌த்த‌ல் ஆ‌கிய கு‌ற்ற‌ங்களு‌க்காக இ‌ந்‌திய‌த் த‌ண்டனை‌சச‌ட்ட‌ம் 153, 153(ஏ), 505(‌ி), 505‌(ி) ம‌ற்று‌ம் 506‌‌ (2) ஆ‌கியவ‌ற்‌றி‌ன் ‌கீ‌‌ழ் வழ‌க்குக‌ள் ப‌திவு செ‌ய்‌ப்ப‌ட்டு‌‌ள்ளது.

மு‌ன்னதாக‌க் கட‌ந்த 24ஆ‌ம் தே‌தி இதேபோ‌ன்றதொரு புகா‌ரி‌ன் பே‌ரி‌ல் செ‌ன்னை மாநகர‌க் காவ‌ல் துறை‌யின‌ர் வேதா‌ந்‌தி‌க்கு எ‌‌திராக வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்து‌ள்ளன‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்