கண்டெடுத்த ரூ. 50 ஆயிரம் பணம் அதகாரியிடம் ஒப்படைப்பு

Webdunia

வியாழன், 27 செப்டம்பர் 2007 (16:10 IST)
கண்டெடுத்த ரூ. 50 ஆயிரம் பணத்தை காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்த தொழிலாளியின் நேர்மையை அனைவரும் பாராட்டினார்கள்.

ஈரோடு டவுன் பகுதியில் நேற்று முன்தினம் மதியம் ரூ. 50 ஆயிரம் பணம் கீழே கிடந்தது. மக்கள் பரபரப்பு நிறைந்த பகுதி என்பதால், பலரும் அதை கண்டு கொள்ளவில்லை.

அப்பகுதியில் உள்ள பழச்சாறு கடையில் தொழிலாளியாக வேலை பார்க்கும் முருகேசன் (25), அவ்வழியாக நடந்து செல்லும் போது, அந்தப்பை தட்டுபட்டது. எடுத்து பார்த்த போது, ரூ. 50 ஆயிரம் பணம் இருந்தது.

முருகேசனுக்கு ஒரே ஆச்சர்யம். பணத்தை எடுத்து வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தார். அதை காவல்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்.

உடனே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சோனலமிஸ்ராவை சந்தித்து ரூ. 50 ஆயிரம் பணத்தை ஒப்படைத்தார். முருகேசனின் நேர்மையை அனைத்து அதிகாரிகளும் பாராட்டினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்