மரணமடைந்த பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் அகில இந்திய தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜனா கிருஷ்ணமூர்த்தியின் இறுதிச் சடங்கு இன்று நடந்தது.
ஜனா கிருஷ்ணமூர்த்தியின் இறுதி சடங்குகள் இன்று காலை 10 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் நடைபெற்றது.
முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இறுதி சடங்கில் கலந்து கொள்கின்றனர்.
உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜன கிருஷ்ணமூர்த்தி நேற்று காலை உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் இல.கணேசன், தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
ஜனா கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், தியாகம் மற்றும் பணிவு உணர்வுடன் நல்ல நிர்வாகியாக திகழ்ந்தவரை பாரதீய ஜனதா கட்சி இழந்துவிட்டது. தென்னிந்தியாவில் பாரதீய ஜனதா வேரூன்ற அவர் பல முக்கிய பணிகளை ஆற்றியுள்ளார் என்று கூறியுள்ளார்.