ஆர்ப்பாட்டம் போதும், மறியல் வேண்டாம்:ஆற்காடு வீராசாமி!

Webdunia

ஞாயிறு, 23 செப்டம்பர் 2007 (16:17 IST)
தி.மு.க.‌வி‌ன‌ர் மறியல் போராட்டத்தைக் கை விட்டு, ஆர்ப்பாட்டம் என்ற அளவில் மட்டும் தங்கள் எதிர்ப்பினைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படு‌கிறா‌ர்க‌ளஎ‌ன்றஅமை‌ச்ச‌ரஆ‌ற்காடு ‌வீராசா‌மி வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

கலைஞரின் உயிரைப் பறித்திட விலை பேசும் வடநாட்டுத் தருக்கன் ஒருவனுக்கு சரியான புத்தி புகட்டிடும் வகையில் பா.ஐ.க. அலுவலகங்கள் முன்பாக கழகத் தோழர்களைத்திரட்டி கருப்புக் கொடி காட்டி, மறியல் நடத்துவோம் என்று கழகத்தின் பொருளாளர் என்ற முறையில் அறிக்கை ஒன்றினை நான் வெளியிட்டிருந்தேன் எ‌ன்று அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌மி கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர்.

இன்று காலையில் தலைவர் என்னை அழைத்து தன்னைப் பற்றி வெளி வந்த செய்திக்காக, மறியல் போன்ற போராட்டத்தை நடத்துவது சட்டம், ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் உள்ளவர்களுக்கு அழகல்ல என்று கடுமையாக எச்சரித்திருக்கிறார் எ‌ன்று அமை‌ச்ச‌ர் தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர்.

எனவே தலைவரின் கட்டளையை என்றைக்கும் மீறாத நான் குறைந்த பட்சம் ஆர்ப்பாட்டம் என்ற அளவிலாவது கழகத் தினரின் எதிர்ப்பை காட்ட அனுமதிக்க வேண்டு மென்றும் இல்லாவிட்டால் பொறுமையிழந்த நிலையில் உள்ள தொண்டர்களைக் கட்டுப்படுத்த இயலாது என்றும் தெரிவித்த பிறகு ஆர்ப்பாட்டம் என்ற அளவில் நம்முடைய எதிர்ப்பைத் தெரிவிக்க மட்டுமே அனுமதி கொடுத்திருக்கிறார் எ‌ன்று ஆ‌ற்காடு ‌வீராசா‌‌மி கூ‌‌றியு‌ள்ளா‌ர்.

எனவே கழகத் தோழர்கள் மறியல் போராட்டத்தைக் கை விட்டு, ஆர்ப்பாட்டம் என்ற அளவில் மட்டும் தங்கள் எதிர்ப்பினைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படு‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌மி வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்