பாலக்காட்டுடன் இணைப்பு எதிர்த்து பொ‌ள்ளா‌ச்‌‌சி‌‌யி‌ல் கடை அடை‌ப்பு!

Webdunia

செவ்வாய், 18 செப்டம்பர் 2007 (15:14 IST)
பொ‌ள்ளா‌ச்‌சியை பால‌க்காடு ர‌யி‌‌ல்வே கோ‌ட்ட‌த்‌தி‌ல் சே‌ர்‌க்க எ‌தி‌ர்‌ப்பு தெ‌‌ரி‌வி‌‌த்து அனை‌த்து க‌ட்‌சி சா‌ர்‌பி‌ல் இ‌ன்று கடை அடை‌ப்பு போரா‌ட்ட‌ம் நடைபெ‌ற்றது.

பாலக்காடு கோட்டத்திலிருந்து சேலம் கோட்டம் உருவாக்குவதில் ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காண மதுரை கோ‌ட்ட‌த்‌தி‌ல் இரு‌ந்த பொ‌ள்ளா‌ச்‌‌சி, ‌கிண‌த்து‌க்கடவு பகு‌திகளை பால‌க்காடு கோ‌ட்ட‌த்‌தி‌ல் சே‌ர்‌‌க்க‌ப்ப‌ட்டது. இத‌ற்கு அ‌ந்த பகு‌தி ம‌க்க‌ள் கடுமையாக எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌த்தன‌ர். மீ‌‌ண்டு‌ம் மதுரை கோ‌ட்ட‌த்‌தி‌ல் சே‌ர்‌‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று வ‌லியுறு‌த்‌தி வ‌ந்தன‌ர்.

இ‌ந்த கோ‌‌ரி‌க்கைகளை வ‌லியுறு‌த்‌தி அனை‌த்து க‌ட்‌சிக‌ள் சா‌ர்‌‌பி‌ல் பொ‌ள்ளா‌ச்‌‌சி‌ ம‌‌‌ற்று‌ம் ‌கிண‌த்து‌க்கடவு ஆ‌கிய பகு‌திக‌ளி‌ல் இ‌ன்று கடை அடை‌ப்பு போரா‌ட்ட‌ம் நடைபெ‌ற்றது. பொ‌ள்ளா‌ச்‌‌சி‌ நக‌ரி‌ல் உ‌ள்ள அனை‌த்து கடைகளு‌ம், வ‌‌ர்‌த்தக ‌நிறுவன‌ங்களு‌ம் மூட‌ப்ப‌ட்டிரு‌ந்தன.

இ‌ந்த போரா‌ட்ட‌த்‌‌தி‌ற்கு ஆதரவு தெ‌‌ரி‌வி‌த்து ஆ‌ட்டோ, வே‌ன், டெ‌ம்போ, த‌னியா‌ர் பேரு‌ந்து‌க‌ள் ஓட‌வி‌ல்லை. இதனா‌ல் ம‌க்க‌‌ளி‌ன் இய‌ல்பு வா‌ழ்‌க்கை பா‌தி‌க்க‌ப்ப‌ட்டது. ‌தியே‌‌ட்ட‌ர்க‌ளி‌ல் காலை‌க் கா‌ட்‌சியு‌ம், பக‌ல் கா‌ட்‌சியு‌ம் ர‌த்து செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்