சேரனு‌‌க்கு புது‌ச்சே‌ரி அரசு ‌சி‌ற‌‌ந்த இய‌‌க்குன‌ர் ‌விருது!

Webdunia

திங்கள், 17 செப்டம்பர் 2007 (15:41 IST)
புது‌ச்சே‌ரி அரசு ம‌ற்று‌ம் நவத‌ர்ச‌ன் ‌திரை‌ப்பட‌க் கழக‌ம் சா‌ர்‌பி‌ல் 'தவமா‌ய் தவ‌மிரு‌ந்து' பட‌த்து‌க்காக இய‌க்குன‌ர் சேரனு‌‌‌‌க்கு ‌சிற‌ந்த இய‌க்குந‌ர் ‌விருதை மு‌த‌ல்வ‌ர் ர‌ங்கசா‌மி வழ‌ங்‌கினா‌ர்.

புது‌ச்சே‌ரி அர‌சி‌ன் செ‌ய்‌தி ம‌ற்று‌ம் ‌விள‌ம்பர‌த்துறை ம‌ற்று‌ம் நவத‌ர்ச‌ன் ‌‌திரை‌ப்பட‌க் கழக‌ம் ஆ‌கியவை இணை‌ந்து நட‌‌த்து‌ம் இ‌ந்‌திய ‌திரை‌ப்பட ‌விழா-2007 நே‌ற்று நடைபெ‌ற்றது. ‌விழா‌வி‌ல் இய‌க்குன‌ர் சேரனு‌‌க்கு ‌சிற‌ந்த இய‌க்குநரு‌க்கான ‌விருதையு‌‌ம், ரூ.10 ஆ‌யிர‌ம் பணமுடி‌ப்பையும் முத‌‌ல்வ‌ர் ர‌ங்கசா‌மி வழ‌ங்‌கினா‌ர்.

இ‌ந்த பண முடி‌ப்பை வறுமை‌யி‌‌ல் உ‌ள்ள வயதான ‌மு‌தியவரு‌க்கு வழ‌ங்கு‌ம்படி இய‌க்குந‌ர் சேர‌ன், முத‌ல்வ‌ர் ர‌ங்கசா‌மி‌யி‌ட‌ம் ‌திரு‌‌ம்ப அ‌ளி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்