சேது சமுத்திரம் : மதவாத சக்திகளிடம் பணிந்துவிடக் கூடாது – கருணாநிதி!

சனி, 15 செப்டம்பர் 2007 (19:22 IST)
ராமர் பாலம் வழக்கில் மத்திய அரசு மனுக்களை திரும்பப் பெற்றதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று கூறியுள்ள தமிழக முதலமைச்சர் கருணாநிதி, இப்பிரச்சனையில் மதவாத சக்திகளிடம் மத்திய அரசு பணிந்துவிடக்கூடாது என்று கூறியுள்ளார்!

சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சரிடம், சேது சமுத்திரத் திட்டப் பிரச்சனையில் மத்திய அரசு இறங்கி வந்துள்ளதாகத் தெரிகிறதே என்று கேட்டதற்கு, நீதிமன்றம், சேது சமுத்திர திட்ட வழக்கில் அவ்வாறு கூறியதால் மத்திய அரசு மனுக்களை திரும்ப்ப்பெற்றுள்ளது. அதற்காக திட்டத்தை திரும்பப்பெறுவோம் என்று பொருளல்ல என்று பதிலளித்துள்ளார்.

“ராமர் பாலம் கட்டப்படவே இல்லை. ராமர் என்று ஒருவர் இருந்ததில்லை. ராமாயணம் என்பது ஆரியர்களுக்கும், திராவிடர்களுக்கும் இடையே நடந்த போராட்டத்தை மையமாக வைத்து புனையப்பட்ட கதை என்று தன்னுடைய புத்தகத்தில் பகுத்தறிவுவாதி ஜவஹர்லால் நேரு கூறியிருக்கிறார” என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்