ராமர் பாலம் புராதனச் சின்னமாக அறிவிக்கக் கோரி ஜெயலலிதா வழக்கு!

Webdunia

வியாழன், 13 செப்டம்பர் 2007 (21:19 IST)
சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலம் என்று கருதப்படும் நிலத் திட்டுக்களை இடிப்பதை தடுக்க வேண்டும் என்றும், அதனை பாதுகாக்கப்பட்ட புராதனச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. பொதுச் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்துள்ளார்!

உலகம் முழுவதும் உள்ள இந்து மக்களின் நம்பிக்கையாகவும், மரியாதைக்குரிய சின்னமாகவும் ராமர் சேது திகழ்கிறது என்றும், அதனை எக்காரணம் கொண்டும் சிதைப்பதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் தனது மனுவில் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தொடர்ந்துள்ள மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில், நாளை ஜெயலலிதாவின் மனுவும் விசாரணைக்கு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்