சேலம் அடுத்துள்ள ஏற்காட்டில் கடந்த இரண்டு நாட்கள் பெய்த பலத்த மழையின் காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
சேலம் அடுத்துள்ள ஏற்காடு தமிழகத்தில் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாகும். இங்கு நாள்தோறும் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவது வழக்கம்.
கடந்த இரண்டு நாட்களாக இப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நேற்று எட்டாவது கொண்டை ஊசி வளைவில் பாறை உருண்டு நடுரோட்டில் விழுந்தது. இதன் காரணமாக இப்பகுதியில் வாகனங்கள் செல்லமுடியவில்லை.
இதனால் நான்கு மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பின் போக்குவரத்து போலீஸார் பாதையை சீர்செய்தவுடன் போக்குவரத்து தொடங்கியது.
ஏற்காட்டில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மலைப்பகுதியில் ஆங்காங்கே நீர்வீழ்ச்சியாக கொட்டுகிறது. இந்த திடீர் நீர்வீழ்ச்சியில் இவ்வழியே செல்லும் சுற்றுலா பயணிகள் ரசித்தும் குளித்தும் மகிழ்ந்தனர்.