புதுக்கோட்டை : பேருந்து விபத்தில் 22 பேர் காயம்

Webdunia

ஞாயிறு, 9 செப்டம்பர் 2007 (12:39 IST)
வேளாங்கண்ணியில் இருந்து ஓரியூர் சென்று கொண்டிருந்த அரசுப் போக்குவரத்துப் பேருந்து சாலையில் இருந்து விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 22 பயணிகள் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் அருகே நேற்று இரவு இந்த விபத்து நடந்துள்ளது என காவல்துறையினர் கூறியுள்ளனர்.

எதிர் திசையில் வந்த இரு சக்கர வாகனத்திற்கு வழி விடுவதற்காக பேருந்து ஓட்டுநர் முயற்சித்தபோது அது கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானதாகக் கூறியுள்ளனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்