10ஆம் வகுப்பு தேர்வு: மீண்டும் வாய்ப்பு!
Webdunia
சனி, 8 செப்டம்பர் 2007 (12:51 IST)
10ஆம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று அரசு தேர்வு இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் கூறினார்.
செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் ஒ.எஸ்.எஸ்.எல்.சி. ஆகிய தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் கூடுதல் கட்டணமாக வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று அரசு தேர்வு இயக்குனர் தெரிவித்துள்ளார்.
10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை சென்னை, நெல்லை, மதுரை, கோவை, திருச்சி, கடலூர், வேலூர் ஆகிய அரசு தேர்வு மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்களை பெற்று, பிறகு பூர்த்தி செய்து அங்கேயே நேரில் சமர்ப்பிக்க வேண்டும். அப்போது தேர்வு எழுத ஹால் டிக்கெட் வழங்கப்படும் என இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் கூறியுள்ளார்.
மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கும் மேலே கூறியது போல விண்ணப்ப படிவங்களை மேற்கண்ட தேதிகளில் பெற்றுக் கொள்ளலாம். சென்னையில் மட்டும் அரசு தேர்வு இயக்குனர் அலுவலகத்தில் பெற வேண்டும் என்று அரசு தேர்வு இயக்குனர்