மருத்துவப் படிப்பிற்குப் பின்னர் ஓராண்டு கிராமப்புற மருத்துவ சேவை கட்டாயம் என்ற சுகாதார அமைச்சகத்தின திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்!
2008-09 ஆம் ஆண்டில் மருத்துவம் பயின்று மருத்துவ பயிற்சி முடித்த மாணவர்கள் கிராமப்புறங்களில் குறைந்தபட்சம் ஓராண்டாவது மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்ற சட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இதன்மூலம், தரமான சுகாதார சேவை நமது கிராமங்களுக்கும் சென்று சேரவேண்டும் என்பது சுகாதாரத்துறையின் நோக்கமாகும்.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் இம்முடிவை எதிர்த்து கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி பயிற்சி மாணவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
2007 ஆம் ஆண்டில் மருத்துவப் பயிற்சியுடன் மருத்துவப் படிப்பை முடிக்கும் மாணவர்கள் மேலும் ஓராண்டு கிராமப்புற மருத்துவ சேவை செய்வதால் ஐந்தரை ஆண்டு படிப்புக் காலம் ஆறரை ஆண்டுகளாக அதிகரிக்கிறது என்றும், அதன்பிறகு தங்களுக்கு எந்த பணி நிரந்தர உத்தரவாதமும் இல்லை என்று போராட்ட மாணவர் கோபால் செளலா கூறினார்.
ஓராண்டுக்கால கிரமப்புற மருத்துவப் பயிற்சி திட்டத்தை அரசு திரும்பப் பெறாவிட்டால் தங்களது வேலை நிறுத்தம் தொடரும் என்றும், இது மற்ற மருத்துவக் கல்லூரிகளுக்கும் பரவும் என்றும் மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.