சென்னை எழும்பூரில் உலகத் தரம் வாய்ந்த புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படவுள்ளதாகவும், இதற்காக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி கூறினார்!
எழும்பூரில் புற்று நோய் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படவுள்ள இடத்தை அமைச்சர் அன்புமணி இன்று பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, புற்று நோய் ஆராய்ச்சி மையத்திற்காக ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் முதல் தவணையாக ஆராய்ச்சி மைய கட்டடம் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாவும் கூறினார்.
நாட்டிலேயே முதல் முறையாக புற்று நோய்க்கு ஆராய்ச்சி மையம் அமைக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.