நீதிபதி கருத்து : கருணாநிதி வரவேற்பு!

Webdunia

புதன், 22 ஆகஸ்ட் 2007 (18:56 IST)
உயர் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், விசாரணையன் போது உச்ச நீதிமன்ற நீதிபதி விடுத்துள்ள கேள்விகள் மனம் மகிழத்தக்கதாக உள்ளது என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்!

முரசொலி நாளிதழில் கேள்வி பதிலாக இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் வருமாறு :

கேள்வி : இட ஒதுக்கீட்டு பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் நீதிபதி ரவீந்திரன் இடையிலேயே கேட்கும் கேள்விகளெல்லாம் மனநிறைவு அளிக்கத்தக்கவையாக உள்ளனவே.

கருணாநிதி : இந்தியாவில் 52 விழுக்காடு மக்கள் பிற்படுத்தப்பட்டோராக இருக்கும் நிலையில், அவர்களுக்கென உயர் கல்வி நிலையங்களில் 27 சதவிகிதம் ஒதுக்கீடு செய்வதில் என்ன தவறு இருக்க முடியும் என்றும், பரம்பரை பரம்பரையாக 20 முதல் 30 சதவிகிதம் உள்ள சமுதாயத்தினர் அனைத்து லாபங்களையும் அனுபவித்து வந்த நிலையில் 70 முதல் 80 சதவிகிதம் சமுதாயத்தினர் அந்த லாபங்களில் ஓரளவாவது அனுபவிக்க முயற்சி செய்வது என்ன தவறு என்றும், பட்டியலெடுக்க வேண்டும் என்று சொல்வது காலதாமதத்தை ஏற்படுத்தும் செயல் என்றும், மனம் மகிழத்தக்க வகையிலே கருத்துக்களை வெளியிட்டிருப்பது ஆறுதலைத் தருகிறது என்றும் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்