பழனி - கொடைக்கானல் இடையே ரோப் கார் திட்டம்!

Webdunia

செவ்வாய், 21 ஆகஸ்ட் 2007 (20:25 IST)
பழனி - கொடைக்கானல் இடையே ரோப்கார் அமைக்க ரூ.68 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது!

பழனி முருகன் கோயில் அறங்காவல் குழுக் கூட்டம், அறங்கவாலர் குழுத் தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடந்தது.

இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாலசுப்பிரமணியம், பழனி - கொடைக்கானல் இடையேயான 14 கி.மீ. தூரத்திற்கு ரோப்கார் திட்டத்தை செயல்படுத்த ரூ.68 கோடி தேவைப்படுகிறது. இதற்கான திட்ட மதிப்பை தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகம் மற்றும் மகேந்திரா பொறியியல் வல்லுனர் குழு இணைந்து தயாரித்துள்ளது.

அரசு நிறுவனமான டிட்கோ மூலம் ரோப்கார் திட்டத்தை நிறைவேற்ற ஆலோசனை நடந்து வருகிறது. இந்த திட்டத்தை பழனி கோயில் நிதியில் இருந்து செயல்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்