சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி கே. வீரராகவன் காலமானார்!
56 வயதான நீதிபதி வீரராகவன், நோய்வாய் பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், தற்பொழுது தேசியவாரதிகள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமாக உள்ள திண்டிவனம் கே. ராமமூர்த்தியின் சகோதரர் நீதிபதி கே. வீரராகவன்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும், மற்ற நீதிபதிகளும் வீரராகவனுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.