காவிரி கரையை பலப்படுத்த ரூ.210 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
திருச்சி பகுதியில் நடந்து வரும் பாதாள சாக்கடை பணிகள் வரும் அக்டோபர் மாதத்தில் முடிவடைந்துவிடும். காவிரி கரையை பலப்படுத்த ரூ.210 கோடியில் புதிய திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.
திருச்சி பகுதியில் வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக கோரையாறு, குடமுருட்டி ஆறு ஆகிய பகுதிகளில் ரூ.31.5 கோடியில் முதற்கட்ட பணிகளை தொடங்க முதலமைச்சர் கருணாநிதி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
அடுத்த கட்டமாக ரூ.47.5 கோடியில் இந்த பணிகள் நடைபெறும். அதே போல் திருச்சி மாநகராட்சி குடிநீர் திட்டப் பணிகள் ரூ.99 கோடியில் விரைந்து முடிக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். முன்னதாக அவர் திருவானைக் கோவில், சிறிரங்கம பகுதிகளில் நடைபெற்ற பாதாள சாக்கடை பணிகளை பார்வையிட்டார்.