துறைமுக தொழிலாளர்கள் செப்.1ல் காலவரையற்ற வேலை நிறுத்தம்

Webdunia

வெள்ளி, 17 ஆகஸ்ட் 2007 (10:56 IST)
இந்தியா முழுவதும் துறைமுக தொழிலாளர்கள் 1-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஐ.என்.டி.யு.சி. பொதுச்செயலாளர் ஜி.காளன் அறிவித்தார்.

துறைமுக தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை துறைமுக தலைவர் அலுவலகம் அருகே நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு ஐ.என்.டி.யு.சி. பொதுச்செயலாளர் ஜி.காளன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டம் முடிந்ததும் ஐ.என்.டி.யு.சி. பொதுச்செயலாளர் ஜி.காளனசெய்தியாளர்களிடமபேசுகையில், துறைமுக தொழிலாளர்களின் பொது கோரிக்கைகள் சம்மந்தமாக இதுவரை எவ்வித முடிவுக்கும் வராமல் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் துறைமுக நிர்வாகங்கள் மெத்தன போக்கை கடைப்பிடித்துவருகிறது. இதனால் ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

எனவே துறைமுக தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1000 உடனடியாக வழங்கவேண்டும். ஓய்வு பெற்ற பென்ஷனர்களுக்கு ரூ.500 வழங்கப்பட வேண்டும். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு ஓய்வுபெறும் வயது 58-ல் இருந்து 60 ஆக மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் இன்னும் எவ்வித முடிவும் எடுக்காமல் காலதாமதம் செய்துவருகிறது.

எனவே துறைமுக தொழிலாளர்களுக்கு ஓய்வுபெறும் வயதை 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தவேண்டும். துறைமுக நிர்வாகங்களை கம்பெனி சட்டத்தின் கீழ் கொண்டுவர முயற்சி செய்துவருகிறார்கள். இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். 10 ஆண்டுகளுக்கு மேலாக துறைமுகங்களில் காலி இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது.

சென்னை துறைமுகத்தில் 11 ஆயிரம் பேர் இருந்த இடத்தில் 8 ஆயிரம் பேராக குறைந்துவிட்டனர். இந்தியா முழுவதும் 40 ஆயிரம் தொழிலாளர்கள் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் இருக்கக்கூடிய தொழிலாளர்களுக்கு வேலைப்பளு உயர்ந்து கொண்டே போகிறது. அதே நேரத்தில் எல்லா துறைமுகங்களிலும் உற்பத்தி திறன் உயர்ந்துகொண்டே போகிறது என்பதை நிர்வாகத்தினர் உணரவேண்டும்.

துறைமுக தொழிலாளர்களின் இந்த கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து துறைமுகங்களிலும் விளக்ககூட்டம் நடத்துவது என்றும், துறைமுக நிர்வாகத்திற்கு வேலை நிறுத்த நோட்டீசு வழங்குவது என்றும் மும்பையில் நடைபெற்ற சம்மேளன கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவின்படி இன்று விளக்ககூட்டம் நடத்தி சென்னை துறைமுக நிர்வாகத்திற்கு விளக்க நோட்டீசு வழங்க இருக்கிறோம்.

வருகிற 30-ந் தேதிக்குள் மத்திய அரசும், துறைமுக நிர்வாகமும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மூலம் நிறைவேற்ற முன்வராவிட்டால், செப்டம்பர் 1-ந் தேதி முதல் துறைமுக தொழிலாளர்கள் அகில இந்திய அளவில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள். சென்னையில் 11 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபஉள்ளனரஎன்றகாளனதெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்