கோட்டையில் கொடியேற்றினார் கருணாநிதி

Webdunia

புதன், 15 ஆகஸ்ட் 2007 (11:58 IST)
புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று காலை 8.30 மணியளவில் நடைபெற்ற 60-வது சுதந்திர தின விழாவில், மூவர்ணக் கொடியை ஏற்றினார், தமிழக முதலமைச்சர் கருணாநிதி.

இதைத்தொடர்ந்து உரையாற்றிய அவர், சுதந்திரப் போராட்ட தியாகிகளை நினைவுகூர்ந்தார். அத்துடன், தமிழக அரசின் அண்மைக்கால சாதனைகளை விளக்கினார்.

இதையடுத்து, ஊனமுற்றோர் மற்றும் மகளிர் நலனுக்காக சேவை புரிந்தோருக்கு தமிழக அரசின் விருதுகளை அவர் வழங்கினார். திருச்சியைச் சேர்ந்த டி.வி.சரஸ்வதிக்கு 'மகளிர் நலனுக்கான சிறந்த சமூகப் பணியாளர்' விருதும், விருதுநகரைச் சேர்ந்த எஸ்.சுந்தரத்துக்கு 'ஊனமுற்றோருக்கான சிறந்த மருத்துவர், விருதும் விருதும் வழங்கப்பட்டது.

மாவட்ட ஊன முற்றோர் மறுவாழ்வு அலுவலர் கா.ஜாஸ்மின், ஊனமுற்றோரை அதிக அளவில் பணியில் அமர்த்திய தொழிலதிபர் திருநாவுக்கரசுவு ஆகியோருக்கும், ஊனமுற்றோர் நல நிறுவன விருதை டாக்டர் ஜி.டி.போவாஸ் மருத்துவமனை பள்ளியும், சிறந்த மகளிர் நல நிறுவன விருதை சேவா பாலம் நிறுவனத்துக்கும் வழங்கப்பட்டன.

சுதந்திர தின விழாவையொட்டி புனித ஜார்ஜ் கோட்டையின் கடற்கறை சாலையில் கூடிய பொதுமக்கள், அனைத்து நிகழ்ச்சிகளையும் கண்டு மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சி முடியும் தருணத்தில், முதலைமைச்சர் கருணாநிதி தனது ஜீப் மூலம் வலம் வந்து பொதுமக்களிடம் கையசைத்து சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்