நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் பாலைவனமாகது :

Webdunia

புதன், 8 ஆகஸ்ட் 2007 (19:22 IST)
டைட்டானியம் தொழிற்சாலையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் பாலைவனமாகி விடாது என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 468 வருவாய்க் கிராமங்கள் இருக்கின்றன. அவற்றுள் ஏழு கிராமங்களை மட்டுமே உள்ளடக்கி டைட்டானியம் டை ஆக்சைடு தொழிற்சாலை அமைய உள்ளது.

குடியிருப்பு பகுதிகளைத் தவிர்த்து இந்த ஏழு கிராமங்களில் மீதமுள்ள மொத்தம் நஞ்செய், புஞ்செய் மற்றும் புறம்போக்கு நிலங்கள் 27,800 ஏக்கர். இந்தப் பரப்பளவில் தான் சுமார் பத்தாயிரம் ஏக்கர் அளவிற்கு சந்தை விலையை அனுசரித்து, நிலத்தை எந்தவிதமான அரசு நிர்பந்தமும் இல்லாமல் நில உரிமையாளர்களின் விருப்பத்தைப் பெற்று, அதன் பிறகு தான் பெற்றுக் கொள்ளப்பட வுள்ளது.

இந்தப் பகுதிகளில் கனிம வளங்களை பிரித்து எடுப்பதால் அவை பாலைவனமாகி பயனற்று போய்விடும் என்பதில் எள் முனையளவுக்குக் கூட அறிவியல் உண்மை கிடையாது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்