மேட்டூர் அணை முழு அளவிற்கு நிரம்பியது

Webdunia

புதன், 8 ஆகஸ்ட் 2007 (16:54 IST)
கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் உபரி நீரால் அதிகரித்த நீர் வரத்தை அடுத்து மேட்டூர் அணை அதன் முழு அளவான 120 அடியை எட்டியுள்ளது.

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நொடிக்கு 40, 778 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 20,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

அணையின் நீர் மட்டம் 120 அடிக்கு அதிகமாக உயரும் நிலையில், நீர் திறப்பு அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கல்லணையில் இருந்து காவிரியிலும், வெண்ணாற்றிலும் தலா 1,773 கன அடியும் கல்லெண்ணை கால்வாயில் 2,704 கன அடியும் கொள்ளிடத்தில் 800 கன அடியும் அதிகரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்