ஈரோடு மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா

Webdunia

திங்கள், 6 ஆகஸ்ட் 2007 (15:10 IST)
ஈரோடு மாவட்டத்தில் ஆடிபெருக்கு திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்த வருடம் ஈரோடு மாவட்டத்தில் ஆடிபெருக்கு விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் புதுமண தம்பதிகள் அதிகமாக வந்து ஆடிபெருக்கை முன்னிட்டு காவிரி கரையோரத்தில் பல்வேறு பரிகாரங்கள் நடத்தினார்கள்.

இதேபோல் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை மற்றும் சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் அணை ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினார்கள்.

இதேபோல் பவானி சங்கமேஸ்வரர் கோயில் சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோயில் ஆகியவற்றில் இன்று அதிகாலை ஆறு மணியில் இருந்தே பக்தர்கள் அதிகமாக காணப்பட்டார்கள். இந்த வருடம் மேட்டூர் மற்றும் பவானிசாகர் அணை நிரம்பிய காரணத்தால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியாக ஆடிபெருக்கு விழாவை கொண்டாடினார்கள். கிராமங்களில் குழந்தைகள் மரங்களில் ஊஞ்சல் கட்டி விளையாடினார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்