கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் 5 பேர் குற்றவாளிகள் என கோவை தனி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை தொடர் கொண்டு வெடிப்பு வழக்கில் அல் உமா தலைவர் பாஷா உள்ளிட்ட 153 பேர் குற்றவாளிகள் என கோவை தனி நீதிமன்றம் கடந்த புதன் கிழமை தீர்ப்பளித்தது . இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சர்புதீன், சிக்கந்தர், மிர் ஷபீர் அகமத், அய்யப்பன், உபைதூர் ரகுமான் ஆகிய 5 பேர் மீதான தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், 5 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி உத்ராபதி இன்று தீர்ப்பளித்தார். இவர்கள் மீதான குக்கிய குற்றச்சாட்டுகளான மதக்கலவரம் தூண்டியது, கூட்டுச்சதி உள்ளிட்டவை சரிவர நிரூபிக்கப்படவில்லை என்றும், எனவே இவர்கள் பிணைய விடுதலை கோரி மனுத்தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதி உத்ராபதி தனது தீர்ப்பில் கூறினார்.
இதனிடையே, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத 84 பேர் பிணைய விடுதலை கோரி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.