போராட்டத்தை கைவிட கருணாநிதி கோரிக்கை!

Webdunia

ஞாயிறு, 5 ஆகஸ்ட் 2007 (17:30 IST)
அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டத்தை வைவிடுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முதலமைச்சர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்!

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் பொதுச் செயலருமான கே. கோபாலகிருஷ்ணன், வரும் மார்ச் மாதத்திற்கு 3 லட்சம் வீட்டு மனைப் பட்டா வழங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது, ஆனால் போதுமானது அல்ல என்றும், வருகிற ஆகஸ்ட் 6 ஆம் தேதி அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மாவட்ட கலெக்டர் மாநாட்டில் இந்தப் பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுத்து சிறப்பு திட்டமாகவே இதனை நிறைவேற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது, இதனையெல்லாம் மனதில் கொண்டு சட்டத்திற்குப் புறம்பாக மேற்கொள்ளவிருக்கும் போராட்டத்தை கைவிட்டு அரசிற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்