காவிரி டெல்டா பகுதிகளில் மழை : 3 பேர் பலி

Webdunia

வியாழன், 2 ஆகஸ்ட் 2007 (10:49 IST)
காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. தஞ்சையில் அதிகபட்சமாக 106 மி.மீ மழை பெய்துள்ளது.

தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் இரவு பெய்யத் தொடங்கிய மழை நேற்று காலை வரை தொடர்ந்தது.

தஞ்சையில் பெய்த கன மழைக்கு, நாஞ்சிக்கோட்டை சாலையில் மரம் முறிந்து மின் கம்பியில் விழுந்து. அப்போது அந்த வழியாக சென்று கொண்டிந்த ஒருவர் மீது மின் கம்பி அறுந்து விழுந்ததில் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

திருவாரூரில், விஜயபுரம் ரயில்வே கீழ் பாலத்தில் தேங்கியிருந்த தண்ணீர்ல் மூழுகி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். வேதாரண்யத்தை அடுத்த அகத்தியம்பள்ளியில் மழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாகை மாவட்டத்தில் பெய்த கன மழைக்கு ஒருவர் பலியானார்.

வெப்துனியாவைப் படிக்கவும்