மத்திய அரசை கண்டித்து 28 ஆம் தேதி போராட்டம் : வரதராஜன்

Webdunia

புதன், 1 ஆகஸ்ட் 2007 (13:48 IST)
விலைவாசி உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நிறுவனங்கள் தலையீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு அலுவலங்கள் முன்பு வருகிற 28 ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்தப்போவதாக மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயாலாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.

மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுக் குழு கூட்டம் சென்னையில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூடத்திற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வரதராஜன், தமிழகத்தில் 3 லட்சம் பேருக்கு இலவச மனைப் பட்டா வழங்கப்படும் முதலமைச்சர் கருணாநிதி அறிவித்திருப்பதை, 25 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றார்.

தமிழகத்தில் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாக தெரிவித்த அவர், இதனை தடுக்க சட்ட ரீதியான நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்