சேலம் ரயில்வே கோட்டம் : போராட்டம் தள்ளிவைப்பு

Webdunia

திங்கள், 30 ஜூலை 2007 (12:07 IST)
சேலம் ரயில்வே கோட்டம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து வரும் கேரள அரசைக் கண்டித்து இன்று நடைபெறுவதாக இருந்த ரயில் மறியல் போராட்டம் ஒத்திவைக்கப்படுள்ளது.

தமிழகத்தில் உள்ள கோவை, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்ட இருப்புப் பாதைகளை பிரித்து தனியாக சேலம் ரயில்வே கோட்டம் அமைக்க தெற்கு ரயில்வே முயற்சி மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தின் நீண்ட நாள் கனவான இத்திட்டம் நிறைவேறுவதற்கு கேரளா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

கேரளாவை சேர்ந்த சில அமைப்புகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதைகண்டித்து, இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக கோவையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதனிடையே, கேரள மாநில அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இதனால் இன்று நடைபெறுதவதாக அறிவிக்கப்பட்ட ரயில் மறியல் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக சேலம் கோட்டம் பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழு தலைவர் இராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அனைத்துக் கட்சித் தலைவர்களிடம் கலந்தாய்வு நடத்திய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்