தோழமைக் கட்சிகளே எதிர்ப்பது அழகல்ல : கருணாநிதி

Webdunia

ஞாயிறு, 29 ஜூலை 2007 (16:16 IST)
அரசு கொண்டு வரும் நல்ல திட்டங்களை தோழமைக் கட்சிகளே எதிர்ப்பது கூட்டணிக்கு அழகல்ல என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கையிலும், அதன்பின் நிதிநிலை அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டதன்படி, படித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி தொடங்கபட்ட இத்திட்டம் முதல் கட்டமாக திருச்சியிலும், இரண்டாவது கட்டமாக கோவையிலும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, 3-வது கட்டமாக, 3 லட்சத்து 38 ஆயிரம் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் முதலமைச்சர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் கருணாநிதி, அரசு கொண்டு வரும் நல்ல திட்டங்களை தோழமைக் கட்சிகளே எதிர்ப்பது கூட்டணிக்கு அழகல்ல என்றும், தோழமைக் கட்சிகள் நல்ல அறிவுரைகளை, வழிமுறைகளை, எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் கூறினார்.

இந்தத் திட்டத்தின் கீழ், பத்தாம் வகுப்பு தேர்வு பெற்றவர்களுக்கு மாதம் ரூ.150-ம், பன்னிரெண்டாம் வகுப்பு தேறியவர்களுக்கு ரூ.200-ம், பட்டதாரிகளுக்கு ரூ.300-ம் வழங்கப்படுவது குறிப்பிடதக்கதாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்