ராஜபாளையம் அருகே விபத்து: 7 பேர் பலி

Webdunia

ஞாயிறு, 29 ஜூலை 2007 (13:05 IST)
ராஜபாளையம் அருகே வேனும், ாரியும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் வேன் தென்காசி சாலையில் சொக்கநாதன்புத்தூர் அருகே சென்று போது, எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதி விபத்திற்குள்ளானது.

இதில் வேனில் இருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். 2 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்