உலக வங்கியின் இயக்குநர இசபெல் குரேரோ தமிழக முதலமைச்சர் கருணாநிதியைச் சந்தித்து, உலக வங்கி உதவியுடன் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விவாதித்தார்!
உலக வங்கியின் முதல் பெண் இயக்குநரான இசபெல், உலக வங்கி உதவியுடன் தமிழ்நாட்டில் மேற்கொண்டுவரும் திட்டங்கள் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்று பாராட்டியதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
தமிழ்நாட்டில் உலக வங்கி அளித்த ரூ.10,635 கோடியில் 9 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ரூ.2,160 கோடியில் சாலைகள் மேம்பாடு, ரூ.597 கோடியில் சமூக நலத் திட்டங்கள், ரூ.717 கோடியில் வாழ்ந்துகாட்டுவோம் திட்டம் ஆகியன குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தச் சந்திப்பின் போது நிதியமைச்சர் அன்பழகன், தலைமைச் செயலர், நிதிச் செயலர் ஆகியோரும் உடனிருந்தனர். (யு.என்.ஐ.)