சென்னை நகரில் அதிகரித்து வரும் குடிநீர் தேவையை சமாளிக்க செம்பரம்பாக்கத்தில் ரூ.300 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தமிழக முதலமைச்சர் கருணாநிதி துவக்கி வைத்தார்!
நாள் ஒன்றிற்கு 53 கோடி லிட்டர் தண்ணீரை சுத்திகரிப்பு செய்து அளிக்கவல்ல சென்னைக் குடிநீர் வாரியத்தின் செம்பரம்பாக்கம் சுத்கரிப்பு நிலையம், நமது நாட்டின் 2வது மிகப் பெரிய குடிநீர் சுத்திகரிப்பு ஆகும்.
புதுடெல்லியில் உள்ள சோனியா விஹார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நாள் ஒன்றிற்கு 63.5 கோடி லிட்டர் தண்ணீரை சுத்திகரப்பு செய்யக்கூடியதாகும்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான திருவள்ளூரை அடுத்த பூண்டி ஏரிக்கு மழைக் காலத்திலும், தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் கண்டலேறு அணையில் இருந்து வரும் தண்ணீரும் தனி கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய ஏரியான செம்பரம்பாக்கத்தில் தேங்கும் மழை நீரையும் சேர்த்து சுத்திகரிப்பு சென்னை மாநகரின் அதிகரித்துவரும் குடிநீர்த் தேவையை நிவர்த்தி செய்ய 1996 ஆம் ஆண்டு ரூ.296 கோடியில் இத்திட்டம் தீட்டப்பட்டது.
இந்த ஆண்டின் துவக்கத்தில் இந்த சுத்திகரிப்பு நிலையம் கட்டி முடிக்கப்பட்டு கடந்த 3 மாதங்களாக சோதனை ஓட்டம் நடந்து வருகிறது.
·பிரான்ஸ் நாட்டின் டெக்ரிமோண்ட் சா நிறுவனம் இந்த சுத்திகரிப்பு நிலையத்தை கட்டி நிர்வகித்து 7 ஆண்டுகளுக்குப் பிறகு நமக்கு அளிக்கும் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.
ஸ்கேடா என்ற சுத்திகரிப்பு முறையைப் பயன்படுத்தி வடிகட்டி தண்ணீர் வடிகட்டப்பட்டு பின் சுத்திகரிக்கப்படுகிறது.
இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து 15.5 கி.மீ. தூரத்திற்கு பெரும் குழாய்கள் அமைக்கப்பட்டு சென்னையின் குடி நீர் விநியோக மையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.