குடியரசுத் தலைவர் தேர்தல் : கருணாநிதி வாக்களித்தார்

Webdunia

வியாழன், 19 ஜூலை 2007 (17:06 IST)
குடியரசுத் தலைவர் தேர்தலில் முதலமைச்சர் கருணாநிதி வாக்களித்தார். தமிழக அமைச்சர்கள் திமுக, காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அறை எண் 62 ல் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்து வருகின்றனர்.

அந்தந்த மாநில தலைநகரங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் சட்டப் பேரவை உறுப்பினர்கள் வாக்களித்து வருகின்றனர். முதலமைச்சர் கருணாநிதி காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின், திமுக, காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களித்தனர். தேர்தலையொட்டி சட்டப்பேரவை வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இன்று மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

வெப்துனியாவைப் படிக்கவும்