மேட்டூர் அணை நீர் வரத்து ஒரு லட்சம் கன அடி!

Webdunia

வியாழன், 19 ஜூலை 2007 (13:55 IST)
கர்நாடகத்தின் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீரின் காரணமாக மேட்டூர் அணைக்கு நொடிக்கு ஒரு லட்சம் கன அடி வீதம் தண்ணீர் வந்துக் கொண்டிருக்கிறது!

மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடியைத் தாண்டியதையடுத்து நேற்று மாலை 6 மணிக்கு பாசனத்திற்கு நீர் திறந்துவிடப்பட்டது. நொடிக்கு 6,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதே நேரத்தில் அணைக்கு வந்துக் கொண்டிருந்த நீரின் அளவு அதிகரித்து இன்று காலை 1 லட்சத்து 5 ஆயிரம் கன அடியை எட்டியது. அணையின் நீர் மட்டமும் 113 அடிக்கு உயர்ந்தது. இதனால் அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு 20,000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் அதிகபட்சம் நீர் மட்டம் 120 அடியாகும். இதே அளவிற்கு நீர் வரத்து நீடித்தால் அடுத்த சில நாட்களில் முழு அளவிற்கு அணை நிரம்பிவிடும் வாய்ப்பு உள்ளது.

தற்பொழுது அணையில் 83 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. அணை 160 அடிக்கு உயர்ந்தால் அதன் அதிகபட்ச கொள்ளளவை எட்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்