பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு

Webdunia

வியாழன், 19 ஜூலை 2007 (10:24 IST)
காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து நேற்று மாலை தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து ஆரம்பத்தில் வினாடிக்கு 6,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இது படிப்படியாக அதிகரிக்கப்படும்.

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையின் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் கடந்த சில நாடகளாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

ஜூலை 25 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என அறிவித்திருந்த போதிலும், நீர்மட்டம் உயர்ந்ததை அடுத்து முன்னதாகவே அணை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர் வரத்து வினாடிக்கு 94,317 கன அடியாகவும், அணையின் நீர் மட்டம் 110 அடியாகவும் இருந்தது.

இந்நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து நேற்று மாலை தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம் மாவட்ட ஆட்சியர் ந. மதிவாணன் அணையில் இருந்து நீர் வெளியேறும் மதகுகளை திறந்து வைத்தார்.

அணையில் இருந்து ஆரம்பத்தில் வினாடிக்கு 6,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இது படிப்படியாக அதிகரிக்கப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்