நாளை பள்ளி வேலை நாள்

Webdunia

சனி, 14 ஜூலை 2007 (10:46 IST)
காமராஜர் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் ஞாயிற்றுக்கிழமையான நாளை பள்ளிகள் நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக பாடுபட்ட பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் ஞாயிற்றுக்கிழமை வருகிறது. காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட அரசு ஆணை வழங்கப்பட்டது.

அதன்படி அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாளாக காமராஜரின் பிறந்தநாளை ஞாயிற்றுக்கிழமை கொண்டாட வேண்டும். ஆடல், பாடல், பேச்சுப்போட்டி என அனைத்துப் பள்ளிகளிலும் நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன்படி நாளை ஞாயிற்றுக்கிழமை பள்ளிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்