அதிக கட்டணம் வசூலித்தால் வழக்கு: பொன்முடி எச்சரிக்கை

Webdunia

வெள்ளி, 13 ஜூலை 2007 (17:21 IST)
தனியார் பொறியியல் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலித்தால் அந்த கல்லூரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொறியியல் கல்லூரியில் மாணவர்களை சேர்ப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிதீர்ப்பு ஆச்சரியம் அளிக்கிறதஎன்றார். சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்படும் என்று கூறினார்.

ஒரு மாணவன் தகுதி அடைப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றால், ஒற்றைச்சாளர முறை தான் சரியானது என்று 7 நீதிபதிகள் பெஞ்ச் தீர்ப்பு வழங்கியதை சுட்டிக்காட்டிய அவர், அதை மீறும் வகையில் தீர்ப்பு உள்ளதாக கூறினார்.

பொறியியல் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு சாதாரண கல்லூரிகளுக்கு ரூ.32,500 என்றும், தரம் உயர்த்தப்பட்ட கல்லூரிகளுக்கு ரூ.37,000 என்றும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், இதை மீறும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்திருப்பதாக கூறினார்.

அதிக கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது குற்றப் பிரிவு வழக்கு தொடரப்படுவதோடு அந்த கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில், இந்திய மருத்துவ கவுன்சில் ஆகியவற்றிக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்