நாமக்கல் அருகே லாரிகள் மோதி விபத்து: 4 பேர் உடல் கருகி பலி

Webdunia

வெள்ளி, 13 ஜூலை 2007 (11:18 IST)
நாமக்கல் அருகே இரண்டு லாரிகள் பயங்கரமாக மோதி தீப்பிடித்து எரிந்ததில் 4 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணல்மேடு என்ற இடத்தில் இருந்து மணலை ஏற்றிக் கொண்டு லாரி ஆட்டையாம்பட்டி என்ற இடத்திற்கு வந்து கொண்டு இருந்தது.

இன்று அதிகாலை 5 மணி அளவில் நாமக்கல்லை அடுத்த புதுப்பட்டி பாலத்தில் லாரி வந்தபோது எதிரே வந்த மற்றொரு லாரி மீது பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் 2 லாரிகளும் தீப்பிடித்து எரிந்தன. இந்த தீ விபத்தில் லாரிகளின் ஓட்டுநர்கள், உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

மேலும், இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்