தமிழகத்தில் 2 நாட்கள் மழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம்

Webdunia

வெள்ளி, 13 ஜூலை 2007 (14:38 IST)
சென்னையில் நேற்று பல இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்கள் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

சென்னையில் நேற்று காலையில் வெயில் வாட்டிய நிலையில், மாலையில் பயங்கர இடியுடன் கன மழை பெய்தது. தமிழகத்தில் அதிகபட்சமாக தொழுதூரில் 69 மி.மீ. மழை பெய்துள்ளது. செஞ்சி, வந்தவாசி, சிதம்பரம், செங்குன்றம் ஆகிய இடங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது.

இந்நிலையில் வங்கக் கடலில் இருந்து மேற்கு நோக்கி ஈரப்பதம் உள்ள காற்று வீசி வருகிறது. மழை மேகங்கள் அதிகம் சூழ்ந்துள்ளன. இதனால் தமிழகம், புதுவையில் அடுத்த 2 நாட்கள் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்