கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை முடிவடைந்ததையடுத்து வருகிற ஆகஸ்ட் 1 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி மக்ககவை தேர்தல் பிரச்சாரத்திற்காக பாஜக தலைவர் அத்வானி கோவை வந்த போது நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 52 பேர் பலியாயினர், ரூ.100 கோடி சேதம் ஏற்பட்டது.
இது தொடர்பான வழக்கில் அல் உம்மா இயக்க தலைவர் பாட்சா, முகமது அன்சாரி உட்பட 166 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. வழக்கு விசாரணை கோவை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து முடிந்தது. வருகிற ஆகஸ்ட் 1 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.