விடை பெற்றது நிமிட்ஸ் போர் கப்பல்

Webdunia

வியாழன், 5 ஜூலை 2007 (14:56 IST)
கடந்த 4 நாட்களாக சென்னை துறைமுகத்தில் முகாமிட்டிருந்த அமெரிக்க போர் கப்பலான நிமிட்ஸ் இன்று காலை விடைபெற்று சென்றது.

பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே அமெரிக்க போர் கப்பல் நிமிட்ஸ் கடந்த 2 ஆம் தேதி சென்னை துறைமுகத்திற்கு வந்தது. துறைமுகத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் நிருத்தப்பட்டிருந்த இந்த கப்பலைச் சுற்றி இந்திய கடற்படை கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

கப்பலில் வந்திருந்த 4000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று சமூகப் பணிகளில் ஈடுப்பட்டனர். மேலும், சுனாமி பாதித்த பகுதிகளை பார்வையிட்ட அவர்கள் அங்குள்ள குழந்தைகளுடன் பொழுதை கழித்தனர்.

பயணம் முடிவடைந்த நிலையில் நிமிட்ஸ் இன்று காலை புறப்பட தயாரானது. இந்தியவிற்கு மேற்கொண்ட நட்புறவு பயணம் இனிமையான பயணம் என்றும், மறக்க முடியாத அனுபவம் என்றும் அமெரிக்க வீரர்கள் தெரிவித்தனர்.

இன்று காலை சுமார் 10 மணி அளவில் நிமிட்ஸ் சென்னை துறைமுகத்திற்கு விடை கொடுத்து புறப்பட்டு சென்றது. வளைகுடா பகுதிக்கு நிமிட்ஸ் தனது அடுத்த பயணத்தை தொடங்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்