ரெயில் பயணச் சீட்டு முன்பதிவில் மாற்றம்

Webdunia

வியாழன், 5 ஜூலை 2007 (09:53 IST)
90 நாட்கள் வரை ரெயிலபயணசசீட்டமுன்பதிவு செய்யும் நடைமுறை திரும்ப பெறப்பட்டது. இனிமேல், ஏற்கனவே இருந்ததுபோல 60 நாட்களுக்கு முன்னதாகத் தான் முன்பதிவு செய்ய முடியும்.

ரெயில்வே துறையில் லாபம் ஈட்ட அமைச்சர் லல்லு பிரசாத் யாதவ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த அடிப்படையில் 60 நாட்களமுன்பவரை ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று இருந்ததை 90 நாட்களுக்கு முன்னதாக ரெயில் பயணசசீட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று ரெயில்வே துறை அறிவித்தது.

இந்த புதிய முறை கடந்த மார்ச் 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த புதிய திட்டத்திற்கு ரெயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், இதற்கு எதிராக ரெயில்வே துறை முடிவு எடுத்துள்ளது.

90 நாட்கள் வரை டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை திரும்ப பெறப்பட்டு உள்ளது. ஜுலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை பருவமழை காலம் என்பதால் ரெயில் டிக்கெட் முன்பதிவு மந்தமாக இருக்கும் என்று ரெயில்வே அதிகாரிகள் இதற்கு காரணம் கூறுகின்றனர்.

அதன்படி ஜுலை 15-ம் தேதிக்கு பிறகு ஏற்கனவே இருந்தது போல 60 நாட்களுக்கு முன்னதாக வரை தான் ரெயில் பயணசசீட்டமுன்பதிவு செய்ய முடியும்.

ஆனால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஓராண்டுக்கு முன்னதாகவே ரெயில் முன்பதிவு டிக்கெட் வாங்கிக் கொள்ளும் முறைக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்